வெனிசுலாவின் முன்னணி விளையாட்டு பொருள் தொழிற்சாலைகள் இரண்டின் நிறைவேற்று அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த தொழிற்சாலையில் களஞ்சிய சாலைகளில் உள்ள விளையாட்டு பொருட்களை, நத்தார் தினத்தில், வறுமையில் வாடும் சிறுவர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள லத்தின் அமெரிக்க நாடான வெனிசுலாவில், பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகளை சடுதியாக அதிகாரித்துள்ளன.
தனியார் நிறுவனங்கள் அதிக லாபமீட்ட முற்படுவதே இதற்கான காரணம் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில், குறித்த இரண்டு தொழிற்சாலைகளின் களஞ்சிய சாலைகளில் இருந்தும் 38 லட்சத்து 22 ஆயிரம் பெருமதியான பொருட்களை வெனிசுலா இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.
அவற்றை வறுமையில் வாடும் சிறுவர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

