ஸ்தான்பூலில் குண்டு வெடிப்புகள் – 29 பேர் பலி

380 0

09-1துருக்கியின் மிகப்பெரிய நகரான ஸ்தான்பூல் நகரின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் 29 பேர் பலியாகினர்.

சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை தாக்குதல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவத்தில் 166 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

குறித்த குண்டு தாக்குதலை அடுத்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு துப்பாக்கிச் சூட்டு சந்தங்களும் கேட்டதாக ஏசியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் 10 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிற்றூர்ந்து தாக்குதலை தொடர்ந்து அங்கு வந்த கழகம் அடக்கும் காவல்துறையிரை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.