பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரிடம் 63 மோசடி தொடர்பிலான கோப்புகள்!

356 0

download-4முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு எதிராக ஆளும் கட்சி தரப்பினர் பலரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் திவிநெகும நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்க எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நீக்கிக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் ஆளும் கட்சி தரப்பினர் பலரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும நிதியில் 290 லட்சம் ரூபாவுக்கும் அதிகமாக பயன்படுத்திக் கொண்டு, 50 லட்சம் நாட்காட்டி அச்சிடப்பட்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கையாக பகிர்ந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தொழில்நுட்ப பிழை காணப்படுகின்றமையினால் நீக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் அல்லது நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணை நிறைவு செய்து அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, அதன் நடவடிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும்.

அதன் பின்னர் அந்த விசாரணை அறிக்கைகளை ஆராய்ந்து குற்றச்சாட்டு தொடர்பில் தவறுகள் இருந்தால் அதனை உறுதி செய்யும் சட்ட முறைகளுக்கமைய வழக்கு தாக்கல் செய்யப்படும்.

அங்கு சட்ட விதிகளுக்கமைய வழக்கு செய்யப்படுவதோடு அதற்காக சாட்சிகள் சமரப்பிக்கப்படும். எனினும் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை உறுதி செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட, வழக்கின் குற்றச்சாட்டு பிழையான முறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வழக்கு தோல்வியடைய வாய்ப்புகள் காணப்பட்ட நிலையில் அதற்கு முன்னர் அதனை நீக்கிக் கொண்டு மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் நிலை சட்டமா அதிபருக்கு ஏற்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த ஆட்சியின் போது இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நிறைவு செய்து வழக்கு தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த கோப்புகளின் எண்ணிக்கை 63 என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இதுவரையில் அது தொடர்பில் உரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.அதற்கமைய சட்டமா அதிபர் சட்டரீதியாக செயற்படுவதில் தாமத்தை ஏற்படுத்துவது அல்லது கைவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்சவின் வழக்கு தொடர்பில் காணப்பட்ட கவனயின்மை நல்லாட்சியை எதிர்பார்த்தவர்களினால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.