’பாரத ரத்னா’ எம்ஜிஆரின் நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம் செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவருக்கு எம்ஜிஆர் நினைவிட வளாகத்திலேயே நினைவிடம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கவும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம் என பெயர் மாற்றம் செய்யவும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

