பாதுகாப்பு மரபுகளை தாண்டி தாயாரை பார்க்க சென்ற மோடி

437 0

201612110533300283_pm-modi-meets-his-mother-in-gujarat-seeks-her-blessings_secvpfபிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்த வைத்தார்.

அதன் முடிவில் அவர் கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் சந்திப்பதற்காக காந்திநகரில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் சென்றார்.

ஆனால் திடீரென அவர் பாதுகாப்பு மரபுகளை உதறிவிட்டு, தன் தாயார் ஹீரா பென் அம்மையாரை காண்பதற்காக ரேசானில் உள்ள இல்லத்துக்கு சென்றார்.

அந்த இல்லத்தில் ஹீரா பென், தனது மற்றொரு மகனுடன் வசித்து வருகிறார்.

அங்கு அவரை பிரதமர் மோடி பார்த்து பேசி மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்தது.