கருணாநிதியுடன் ரஜினி சந்திப்பு

248 0

201612102015012198_rajinikanth-meets-dmk-chief-karunanidhi_secvpfதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

கருணாநிதிக்கு கடந்த முதலாம் திகதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் உடல்நிலை சீரடைந்து வந்தது.

ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை பூரண நலம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் திகதி அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.