உத்தேச புதிய அரசியலமைப்பு – சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், கட்டாயம் தோல்வி – அமைச்சர் சம்பிக்க

318 0

champika2உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தினால், அது கட்டாயம் தோல்வியடையும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு பிரதேச மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் அதிகளவிலான அதிகாரங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் கிடைக்காது என்பதால், வடபகுதி மக்கள், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் எனவும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுகிறது என கூறி, தென் பகுதி மக்கள் அதனை தோற்கடிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளுக்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் அணியும், ஜாதிக ஹெல உறுமயவும் தெளிவான எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியும் சில விடயங்களுக்கு எதிர்ப்பை முன்வைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திரம் விவகாரம் போன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பன சர்வஜன வாக்கெடுப்பின் போது பாதிப்பாக அமையும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.