பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் பெரிய கூட்டாளி இந்தியா

429 0

201612100350323650_us-congress-passes-bill-declaring-india-major-defence_secvpfபாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி இந்தியா என்று அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்டில், பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி இந்தியா என்று அறிவித்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, ஒபாமா அரசின் நிர்வாகம் கடந்த ஜூன் மாதமே இதற்கான முடிவுகளை எடுத்த போதும் சட்டபூர்வமாக நேற்று நெறிமுறைப்படுத்தப்பட்டது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் அஸ்டான் கர்டெர், இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மசோதா அந்நாட்டு செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள அஸ்டான் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பாரிக்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, பாதுகாப்புத் துறையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இந்த கூட்டத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டது.