மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
வியட்நாம் தேசிய பேரவைத் தலைவர் நிகுயன் தி கிம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளிடையேயான நல்லுறவு குறித்து ஆலோசனை செய்தார்.
முன்னதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் இந்தியா – வியட்நாம் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை வலுப்படுத்தும் என்று மோடி தெரிவித்தார். மேலும் முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் வியட்நாம் சென்றிருந்த போது நிகுயன் தி கிம்மை சந்தித்ததை மோடி நினைவு கூர்ந்தார்.
மேலும், முதல் பெண்மணியாக வியட்நாம் தேசிய சபையின் தலைவர் பதவிக்கு வந்துள்ளார். இதன் மூலம் உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் அவர் உத்வேகமாக திகழ்கிறார்” என்றார்.

இதனையடுத்து, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை, வியட்நாம் தேசிய பேரவைத் தலைவர் நிகுயன் தி கிம் சந்தித்தார்.

