டிசம்பர் 3-வது வாரம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது

227 0

201612091125102527_admk-general-body-meeting-on-december-3rd-week_secvpfமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக 7 நாள் துக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே டிசம்பர் 3-வது வார இறுதியில் பொதுக்குழு கூடும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவு காரணமாக அ.தி.மு.க. ஆட்சியிலும், கட்சியிலும் மெல்ல, மெல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.

தற்போது இது பற்றி வெளியில் தெரியாவிட்டாலும் இந்த மாதம் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அச்சாரமும், அறிகுறிகளும் தோன்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவில் கூட உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தலைமை தேர்தல் கமி‌ஷன் நிர்ணயித்துள்ள விதிப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஆண்டுக்கு ஒரு தடவை, பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அது போல 6 மாதத்துக்கு ஒரு தடவை செயற்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஜெயலலிதா தலைமையில் கடந்த ஆண்டு (2015) டிசம்பர் 31-ந்தேதி நடந்தது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி நடந்தது.

இந்த ஆண்டுக்கான அ.தி. மு.க. பொதுக்குழு கூட்டம் இன்னும் நடைபெறவில்லை. இன்னும் 22 நாட்களுக்குள் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இந்த 22 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த இயலாவிட்டால், அதற்கான காரணத்தை சொல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் ஜெயலலிதா மறைவு காரணமாக புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருப்பதால் இந்த மாதமே அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட தீர்மானித்துள்ளனர்.

தற்போது ஜெயலலிதா மறைவுக்கான 7 நாள் துக்கம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே டிசம்பர் 3-வது வார இறுதியில் பொதுக்குழு கூடும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பர் 28-ந்தேதி நிறைந்த அமாவாசை தினம் வருகிறது. எனவே அன்று பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்க தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.