கொக்கேய்ன் வர்த்தகர்களினால் இலங்கையில் சீனி இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் சீனி கொள்கலன்களை கொக்கேய்ன் போதைப் பொருள் வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்வதனால் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் சீனி இறக்குமதி நடவடிக்கைகள் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக சீனி இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரேஸிலிலிருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்படும் சீனி கொள்கலன்கள் ஐரோப்பா சென்று அங்கிருந்து இலங்கை போன்ற நாடுகளுக்கு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழியை பயன்படுத்திக் கொள்ளும் போதைப் பொருள் வர்த்தகர்கள் உரிய நேரத்தில் ஐரோப்பாவில் போதைப் பொருட்களை எடுக்கத் தவறும் போது அந்த போதைப் பொருட்கள் இலங்கையை வந்தடைவதாக சீனி இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தாத நிலையில் அதிகளவு போதைப் பொருட்கள் மீட்கப்படுவதனால் சீனி இறக்குமதி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

