ஜெயலலிதா சிலை செய்ய 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்

246 0

201612091125110808_2-admk-mlas-intensity-make-jayalalithaa-statue_secvpfஅரசியல் தலைவர்களின் சிலைகள் செய்வதில் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத்திடம் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சிலை செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்து நான்கு நாட்களே ஆன நிலையில் அவருக்கு கோவில் கட்டும் முயற்சியிலும் சிலைகள் அமைக்கும் நடவடிக்கைகளிலும் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அரசியல் தலைவர்களின் சிலைகள் செய்வதில் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத்திடம் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதா சிலை செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள்.

சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்தான் இந்த ஆர்டரை கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் முதலில் ஜெயலலிதா சிலையை நிறுவுவது யார் என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலைக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். அந்த சிலைகள் செய்யும் பணி ஐதராபாத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொம்முலூரு என்ற கிராமத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

ஜெயலலிதா சிலைகள் சுமார் 9 அடி உயரத்தில் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான மாதிரி தயாராகி விட்டது. வெண்கல சிலையை செய்து முடிக்க 20 நாட்கள் ஆகும். சிலையை முழுமையாக செய்து முடிக்க 2 மாதங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா சிலையை தர வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இந்த சிலைகள் ஒவ்வொன்றும் தலா ரூ.9 லட்சம் செலவில் தயாராகி வருகிறது.