சிரியா – ஈராக் போரில் 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

267 0

201612091110011890_50-thousand-is-militants-killed-in-syria-and-iraq-war_secvpfசிரியா மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் பதுங்கி இருந்த 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் போரின்போது கொல்லப்பட்டனர்.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். அவர்களின் அட்டூழியம் அதிகரித்ததால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்க கூட்டு படைகள் அங்கு முகாமிட்டு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றன.

அங்கு தொடர்ச்சியாக இடைவெளியின்றி போர் விமானங்களும், ஆளில்லா விமானங்களும் குண்டு மழை பொழிந்து வருகின்றன. சிரியா மற்றும் ஈராக்கில் இதுவரை 16 ஆயிரம் தடவை குண்டுவீச்சு நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த இரு நாடுகளிலும் பதுங்கி இருந்த 50 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் மொசூல், சிரியாவில் ரக்கா ஆகிய நகரங்களில் தீவிரவாதிகள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதில் பொதுமக்கள் தரப்பில் 173 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இத்தகவலை அமெரிக்க கூட்டு படையின் செய்தி தொடர்பாளர் ஜான் டேனியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் குண்டு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களில் ஈடுபட்டனர். அதை அறிந்து முன்கூட்டியே தாக்குதல் நடத்தி அவர்கள் அழிக்கப்பட்டனர் என்றார்.

ஆனால் அமெரிக்கப் படைகள் குண்டு வீசியதில் பொதுமக்கள் 1957 பேர் பலியாகி உள்ளதாக சிரியா அரசும், ரஷியாவும் கூறியுள்ளன.