தேவையற்ற வகையில் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அண்மையில் செய்யப்பட்ட இரண்டு முறைப்பாடுகளை மையப்படுத்தி கூட்டு எதிர் கட்சியின் இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர் கட்சியினர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளனர். இதனை கவனத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு முன் உண்மைகளை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

