சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணம் அதிகரிக்கவில்லை

350 0

picsart_09-29-05-23-43சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயதிலும் கட்டணத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சில சாரதி பயிற்சி நிலையங்களால் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது மற்றும் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் சாரதிப் பயிற்சிக்காக வருகின்ற மாணவர்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்காக அதிகளவு பணத்தினை வசூலிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி சுட்டிகாட்டியுள்ளார்.