ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும்.
இந்த வருடமும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை 14வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் உலகின் பல மொழிகளை சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி, சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் திகதி ஒத்தி வைத்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

