அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

371 0

201612082159157113_69-magnitude-earthquake-hits-coast-of-northern-california_secvpfஅமெரிக்காவின் மேற்கு பகுதியில் பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது கலிபோர்னியா மாகாணாம். கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.9ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் பெர்ண்டேல் பகுதியில் இருந்து கடல் பகுதிக்குள் சுமார் 104 மைல் தூரத்தில் இந்த நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.