நத்தார் பண்டிகை – 400 கைதிகளுக்கு விடுதலை

408 0

release-720x480நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமையானதாகும்.

அதன் அடிப்படையில் இந்த முறையும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு சுமார் 400 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை உள்ளிட்ட பிரதான சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துவரும் சில கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர், பாரிய பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.