யாழ். அனர்த்த நிலைமை: இதுவரை 75,000 பேர் பாதிப்பு- 2000 வீடுகள் சேதம்!

326 0

யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 22 ஆயிரத்து 620 குடும்பங்களைச் சேர்ந்த 74 ஆயிரத்து 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்த நிலைமைகளின்போது இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் தற்போது 21 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 340 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 93 வீடுகள் முழுமையாகவும், இரண்டாயிரத்து 969 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாக என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.