யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

305 0

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புரெவி புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு மட்டும் நாளைய தினம் வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.