பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார் சி.டி. விக்ரமரத்ன

328 0

இலங்கையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக சந்தன விக்ரமரத்ன இன்று (27) பதவியேற்றுள்ளார்.

சுமார் 19 மாதங்களாக பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய அவர், பொலிஸ் தலைமையகத்தில் இன்று பதவியேற்றுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபரான சந்தன விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை  அண்மையில் அனுமதி வழங்கியது.

பொலிஸ் மா அதிபராக இருந்த  பூஜித் ஜயசுந்தர உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில், விடுமுறையில் இருந்தபோதே கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.