கல்லறை விழிகள் திறந்திடும் வேளை – தலைநகர் தந்த கவி.

154 0
கல்லறை விழிகள் திறந்திடும் வேளை
மணிகளின் ஓசை ஒளித்திடுமே !
தீபங்கள் ஏற்றி தொழுதிடும் நேரம்
உணர்வின் அலைகள் எழுந்திடுமே
போரினில் ஆடி சூடிய வாகை
காட்சிகள் நெஞ்சினில் எழுகிறதே !
மண்ணினைக் காக்க உயிரதை ஈந்த
வீரத்தின் தியாகம் தெரிகிறதே !
தமிழீழ விடியல் உருவாக்கும் பாதை
வழியான எங்கள் மாவீரரே !
உயிராகி மூச்சாய் தமிழீழ வானில்
விரிவான எங்கள் மாவீரரே !
கார்மேகங்கள் அலைமோதுதே
கருவானம் உருவெறி தலை சாய்க்குதே !
பூஞ்சோலைகள் பூத்தூவுதே
மாவீரர் கல்லறையின் தாள் சேருதே !
சென்னீர் சிந்தி போரை வளர்த்தீர் !
மண்ணின் வலிகள் நாளும் சுமந்தீர் !
மாவீரரே எங்கள் மாவீரரே !
பெருவலு அதிவோடு களமாடினீர் !
வரும் பகை பொடியாக கொடியேற்றினீர் !
போர்க்காலங்கள் நிழலாடுதே
தமிழீழம் கருவான எழில் தோன்றுதே !
பார்யாவிலும் பதிவானதே
தமிழ் வீரம் உருவான உரம் தோன்றுதே !
உரிமைப் போரில் ஆழுமை கொண்டீர் !
உணர்வின் தீயில் யாகம் வளர்த்தீர் !
மாவீரரே ! எங்கள் மாவீரர் !
தலைவரின் விழி வீச்சில் களமாடினீர் !
தலைமுறை விடைகாண விண்ணேறினீர் !
தலைநகர் தந்த கவி.