பிரபாகரனுக்கு அனுமதி – எமக்கு தடை – சாடுகிறார் ஞானசாரதேரர்

321 0

ganasaraமட்டக்களப்பு நகருக்குள் எம்மை நுழைய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இணைந்து செயற்பட்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே, அந்த தரப்பினர் மீது சிங்களவர்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என பொது பாலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்தி, மனித படுகொலைகளை புரிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர் தினத்தன்று கொண்டாடினார்கள்.

அதற்கு இந்த அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. அத்துடன், குறித்த செயற்பாட்டிற்கு எதிராக தடையுத்தரவை பிறப்பிக்குமாறு புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுக்கவில்லை.

எனினும், சிங்கள அமைப்புகள் எந்த முறையில் கூட்டம் நடத்தினாலும் புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பை காரணம் காட்டி தடை உத்தரவு கோரி நிற்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.