ஜப்பானிய பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் (காணொளி)

397 0

new-picture-2கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்;தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினால் பல்வேறு சர்வதேச நிறுவனங்;களின் நிதியுதவியுடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 2010ம் ஆண்டு ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மயில்வாகனபுரம் பிரமந்தனாறு பெரியகுளம் புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் பயிர் செய்கை நிலங்கள் மற்றும் குடியிருப்பு  காணிகள் என்பவற்றில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்களின் பயிர் செய்கைகளுக்கு மீள்குடியேற்றத்திற்கும் கையளிக்கப்பட்டுள்;ளன.

இந்நிலையில் கிளிநொச்சி விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய பிரதிநிதி மிசாகோ தகாயமா  தலைமையிலான குழுவினர் இன்று (06-12-2016) பகல் 11.30 மணிக்கு மயில் வாகனபுரம் பிரமந்தனாறு குளக்கட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியதுடன் தொடர்ந்து மயில்வாகனபுரம் பாடசாலை பெரியகுளம் புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்து நிலமைகளை பார்வையிட்டதுடன் பொதுமக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.