பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமா நிலை

288 0

201612041055054057_nannilam-govt-hospital-woman-coma-status-health-co-director_secvpfபிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமா நிலைக்கு சென்றது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அசோகன் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள செருவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் விவசாயி. இவரது மனைவி கமலா (39). திருமணம் முடிந்து 18 ஆண்டுகளுக்கு பின்பு இவர் கருத்தரித்து இருந்தார்.

இதையடுத்து பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கமலாவை பரிசோதித்து சான்றிதழ் வழங்கி இருந்தனர்.

அதில் ரத்த குரூப் பி நெகட்டிவ் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி பிரசவத்திற்காக கமலா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலம் கமலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒருவாரம் முடிந்த நிலையில் அறுவை சிகிச்சை தையலை பிரிக்க கமலா மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.

உடல் அளவில் தளர்ந்திருந்த அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கமலா கண்விழிக்கவில்லை. அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் திடீரென கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர்.

இதனை கேட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த பாதிப்புக்கு காரணம் நன்னிலம் அரசு மருத்துவமனைதான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குர் அசோகன் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தி வருகிறார்.

தவறு கண்டறியப்பட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.