காவிரி நீரை மீட்க தவறியதால் தமிழகம் வறட்சியில் வாடுகிறது

268 0

201612041027528536_omalur-gk-vasan-says-drought-lives-in-tamilnadu-the-cauvery_secvpfமத்திய, மாநில அரசுகள் காவிரி நீரை மீட்க தவறியதால் தமிழகம் வறட்சியில் வாடுகிறது என்று ஓமலூரில் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவர் பி.கே.சின்னையன் மகள் கீர்த்தனா-ஜீவா ஆகியோரின் திருமண விழா ஓமலூரில் இன்று நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் பி.கே.சின்னையன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மத்திய, மாநில அரசுகள் காவிரி நீரை மீட்க தவறிவிட்டது. இதன் காரணமாக தமிழகம் வறட்சியில் வாடுகிறது. தமிழக மக்கள் குடிநீருக்கு கூட வழியில்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். வறட்சியின் காரணமாக பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இந்த நிலை மாற கருகிப்போன பயிர்களுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும். தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு போதிய நிவாரண வழங்க வேண்டும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மீளமுடியாத துன்பத்தில் சிக்கியுள்ளனர். வங்கியில் பணம் எடுக்க செல்பவர்களின் சாவு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந்தேதியில் இருந்து சுங்க கட்டணத்தை வசூலிக்க தொடங்கியுள்ளனர். டிசம்பர் 31-ந் தேதிவரை சுங்க கட்டண வசூலிப்பதை நிறுத்த வேண்டும். லாபத்தில் இயங்கி வந்த சேலம் இரும்பாலையை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனை கண்டித்து சேலம் ரெயில் நிலையம் முன்பு வருகிற 12-ந் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாப்பா சின்னையன் நன்றி கூறினார்.