பொழுதுபோக்கு இடங்களில் மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த கோரிக்கை

258 0

20-1437388777-physically-chalanged-handicapped-600-jpgஅனைவரையும் போல மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வரும் நிலையில் சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிக்கான செயற்பாட்டாளர் ஸ்வேதா கூறியுள்ளார்.

உலக மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஸ்வேதா மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும்  மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்லமுடியாத நிலை உள்ளதாக ஸ்வேதா கூறினார். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கடற்கரைகளில் தற்காலிக பாதைகள் அமைத்து தரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.