உள்ளுராட்சி தேர்தல் குறித்த அனைத்து கட்சி கூட்டம் விரைவில்

277 0

1633a7ab8f9ef7ad922f44cc47e827e4அனைத்துக்கட்சிகளும் இணக்கம் வெளியிட்டால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்தமுடியும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி, இறுதி தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஜேவிபியின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

புதிய தேர்தல் சட்டம், அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமையை ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

இதன்போதே அமைச்சர் லக்மன் கிரியெல்ல தமது பதிலை தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த யோசனைக்கு தாமும் உடன்படுவதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வினவியபோது, திருத்தப்பட்ட புதிய முறையின் படியே உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.