25ஆயிரம்ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம்

268 0

downloadபொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார்.

3 பேர் அடங்கிய குறித்த குழு பொது போக்குவரத்து முறைமையில் காணப்படும் சிக்கல்களை ஆராய்வதுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு தண்டப்பணமாக அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவரப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் பஸ் சங்கங்கள் சில ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய இடது பக்கத்தால் முந்திச் செல்வது மற்றும் வேகம் தொடர்பில் 25 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை நடைமுறை படுத்தாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க பல சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த குழு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் செயற்படும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.