தமிழக ஆளுநர் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

263 0

201612030453089750_stalin-sudden-meeting-with-the-governor-of-tamil-nadu_secvpfதமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துள்ளார்.

சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சட்டமன்ற குழுக்களை அமைக்க வலியுறுத்தி இதன்போது தமிழக ஆளுநரிடம் ஸ்டாலின் மனுவொன்றைக் கையளித்துள்ளார்.

தமிழகத்தின் 15வது சட்டமன்றம் உருவாகி 6 மாதம் ஆகியுள்ளபோதும், இதுவரை எந்த குழுவும் அமைக்கப்படவில்லை என இந்தச் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையிலேயே ஆளுநரைச் சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.