ஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதல் – 23 பேர் பலி

256 0

201607231654337972_explosion-strikes-near-large-demonstration-in-kabul-police_secvpfஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் இரண்டு பெண்களும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறி வைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக தெற்கு ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு காவற்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 29 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தலிபான் தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.