மட்டக்களப்பில் தனியார் பேரூந்து சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு தோல்வி (காணொளி)

336 0

new-pictureமட்டக்களப்பு மாவட்டத்தில்  தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.நேற்று நள்ளிரவு தொடக்கம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.எனினும் இலங்கை போக்குவரத்துச்சேவை பஸ்கள் மற்றும் வைத்தியசாலை, பாடசாலை சேவைகள் மேற்கொள்ளும் தனியார் பஸ்கள் தமது சேவைகளை தொடர்ந்து வருகின்றன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பேருந்து புறக்கணிப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

அதிளவான இலங்கை போக்குவரத்துசபை பஸ்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பயணிகள் சிரமமின்றி தமது பயணங்களை தொடர்வதை காணமுடிகின்றது.மட்டக்களப்பில் இன்று காலை இலங்கை போக்குவரத்துசபை பஸ் மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று காலை ஏறாவூரில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற பஸ்மீது ஊறணியில் வைத்து இந்த கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்து இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பினை நடாத்திவரும் நிலையில் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.