மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

288 0

%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9fமட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் டிசம்பர் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்டதையடுத்து இவர்களை டிசம்பர் 16ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்ஐஎம் றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்.எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த செப்டம்பர் 11ஆந் திகதி அதிகாலை பொல்லால் அடித்து கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய முஹம்மது பாஹிர், வசம்பு என்றழைக்கப்படும் 28 வயதுடைய உசனார் முஹம்மது தில்ஷான், 23 வயதுடைய கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம், 23 வயதுடைய புஹாரி முஹம்மது அஸ்ஹர், 30 வயதுடைய இஸ்மாயில் சப்ரின் மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால் ஆகியோர் கைதுசெய்ய்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பகுப்பாய்விற்காக அனுப்பட்ட, சந்தேக நபர்களது இரத்த மாதிரி மற்றும் தடயப்பொருட்கள் குறித்த அறிக்கை இன்னும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தநிலையில், இது தொடர்பில் சட்டத்தரணிகள் நீதவானின் ககனத்திற்கு கொண்டுவந்தபோது பரிசோதனை அறிக்கைகளை துரிதமாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று நீதிபதி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது