யாழில் கஞ்சா மீட்பு

312 0

sequence-01-still024யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் 87இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும், அதனை கடத்திவந்த மூவரையும் கைது செய்துள்ளதாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இனைந்து சோதனை செய்யும்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது படகில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்த கஞ்சாவனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த கஞ்சா மற்றும் அதனை கடத்தி வந்த பருத்திறை குரும்பசிட்டி பகுதியை சேர்ந்த மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் அவர்களிடம் இருந்து 50 கிலோ கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த கஞ்சாவின் மொத்த பெறுமதியானது 87இலட்சத்தி 50ஆயிரம் ரூபா இலங்கை ரூபாக்கள் எனவும் குறித்த கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைத்தையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்திருந்தார்.