நாட்டில் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க முடியாது-மனோ கணேசன்

296 0

sequence-01-still019நாட்டின் வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவது இல்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காலியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்இ ஆட்சிக்கு வருவது நாட்டு பிரஜைகளின் ஜனநாயக உரிமை எனவும்எ வர் வேண்டுமானாலும் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ அதிகாரத்திற்கு வந்து நாட்டை ஆள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன்இ நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதற்கு தற்போதைய அரசாங்கம் வாய்ப்பளிக்கப் போவதில்லை. இனவாதிகளுக்கு  பிரிவினைவாதிகளுக்கு தீவிரவாதிகளுக்கு இடமளிக்கப்போவது இல்லை.

இது ஒரே நாடு இதனை பிரிக்க எவராலும் முடியாது.
அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற எவரும் ஆயுதங்களை கையிலெடுக்க எவருக்கும் அனுமதியளிக்க முடியாது.

வடக்கோ கிழக்கோ நாட்டை பிரிக்கவோஇ ஆயுதத்தை கையில் எடுக்கவோ எவருக்கும் அனுமதியில்லை. தெற்கில் நான் தெரிவிக்கும் இந்த கருத்துக்களை வடக்கிற்கும் நான் கொண்டு செல்வேன் அது எனது கடமை.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தேர்தல் முறையொன்று காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்இ அந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இனவாதம் அல்லது பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் 75 வீதமான மக்கள் சிங்களவர்கள் பௌத்தர்கள் அது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை. இந்த பௌத்த அரசாங்கத்தை கவிழ்த்து தங்களுக்கு தேவையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு எவருக்கும் உரிமையுண்டு அது ஜனநாயக உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வர முடியும் பிரச்சினைகள் இல்லை. எனினும் அதற்கென்று ஒரு முறை இருக்கின்றது.

அதற்கென்று ஒரு தேர்தல் முறை இருக்கின்றது. அந்த தேர்தலில் வெற்றிபெற இனவாதத்தையோ பிரிவினைவாதத்தையோ ஏற்படுத்த வேண்டும்.

சிங்களவர்கள்இ தமிழர்கள் முஸ்லிம்கள் என்ற ரீதியில் வேறுபட்டிருந்தாலும் ஸ்ரீலங்கா பிரஜைகள் என்ற விடயத்திற்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பிரஜைகள் அனைவரும் தமது தாய்மொழியை கற்றுக்கொள்வது போன்று வேறு மொழிகளையும் கற்பது அவசியம்.

பல்வேறு மொழிகளை பேசுகின்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது. சிங்கள மக்களின் பிரச்சினைகள் அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்களை தெரிவிக்க சிங்கள மொழி அவசியம்.

அதுபோல வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தெற்கு மக்களுக்கு தெளிவுபடுத்த தமிழ் மொழி அவசியம்

ஆகவே ஸ்ரீலங்கா வாழ் மக்கள் தமது தாய்மொழியை தவிர சகோதர மொழியை கற்பது அவசியம். நாட்டில் நல்லிணக்கத்தையும்இ சகவாழ்வையும் இன்று ஏற்படுத்தாவிடின் இதுபோன்றதொரு வாய்ப்பு இனிமேல் வாய்க்கப்போவது இல்லை. தமிழும்இ சிங்களமும் தேசிய மொழிகள்இ ஆங்கிலம் இணைப்பு மொழி. மூன்று மொழிகள் ஒரே நாடு என்பதே எமது கொள்கை.

நான்கு மதங்கள் காணப்படுகின்றன. அனைத்தும் எமது மதங்களே. பிரிவினை தேவையில்லை. எமது நாட்டில் வெவ்வேறு  மொழிகளை பேசுகின்ற வெவ்வேறு  மதங்களை பின்பற்றுபவர்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தே ஐக்கிய ஸ்ரீலங்காவை உருவாக்க முடியும். அவர்களின் கலை கலாசாரத்தை ஏற்றுக்கொள்வது அவசியம். அந்த சந்தர்ப்பத்திலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.