மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவர்கள் இணைவு (காணொளி)

299 0

batti-unpமட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியில், புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களுக்கான கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய அங்கத்தவர்களாக  இணைந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மொகமட் சாபி, ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி மத்திய குழு தலைவர் கே.எ.எ.அளியர், மாவட்ட மீனவ சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் தங்களது புதிய உறுப்பு உரிமை மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரனிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.