முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறிய சஜித்

230 0

இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக் குத் தேசிய பட்டியில் கிடைத்த அமைச்சர் பதவிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எந்த உறுப்பினர் பதவியும் கிடைக்க வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் இம்முறை பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட வருமான நசீர் அஹமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தேசிய பட்டியலில் அமைச்சர் பதவி தருவதாக சஜித் ஒரு அறிக்கையில் கூறினார் என நசீர் அஹமட் தெரிவித் துள்ளார்.

தங்களின் கட்சி வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் இருந்த ஆசனங்களைக் கூட தியாகம் செய்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற அதிகளவிலான பங் களிப்பைச் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழ்நிலையில், தனது கட்சிக்குத் தேசிய பட்டியல் இருக்கை வழங்காதது தனது மக்களை ஏமாற்று வதாகும் என்பதை சஜித் பிரேமதாச நினைவில் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை சஜித் பிரேமதாச மீறியது தங்களின் கட்சியின் வரலாற்றில் ஒரு கருப்பு அடையாளமாகக் குறிப்பில் உள்ளடக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய செயலை சஜித் பிரேமதாச செய்வார் என தெரிந்திருந்தால் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டிருக் கலாம். அவ்வாறு போட்டியிட்டிருந்தால் இதனை விட அதிக ஆசனங்களை வெற்றிபெற்ற வாய்ப்பிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச எடுத்த இந்த முடிவு எதிர்காலத்தில் ஐக் கிய மக்கள் சக்தி கட்சிக்கு இடையே தவிர்க்க முடியாமல் சில விரிசல் உருவாக்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.