தேசிய பட்டியல் நியமனத் தொடர்பில் நான் தன்னிச்யையாக செயற்படவில்லை

331 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியன் பொதுச் செயலாளராகி நான் தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளேன் என எமது கடசித் தலைவர் தெரிவித்திருக்கின்றார். உண்மையாக நான் தன்னிச்சையாக நடந்திருந்தால். இந்த தேசியப் பட்டியலுக்கு நான் என்னையே நியமித்திருக்க முடியும். எனவே இது எந்த விதத்திலும் எனது தன்னிச்சையான முடிவு அல்ல. இந்த நியமனம் தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாக்குச் சரிவு காரணமாக இம்முறை ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினர்தான் கிடைத்தது. இந்த தேசியப் பட்டியில் நியமனத் தொடர்பில் வழக்கமாக கட்சித்தலைவர்கள் கூடி ஒரு முடிவை எடுப்பார்கள். நான் அவர்கள் தரும் முடிவினை வெளியிடுபவராகத்தான் இருபேன். இம்முறையும் வழமைபோன்று எமது பங்காளிக் கட்சிகளின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டிருக்கும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

இவ்விடையம் தொடர்பில் நான் திருகோணமலையில் உள்ள சம்மந்தன் ஐயாவின் வீட்டிற்குச் சென்று ஆராய்ந்தோம். அப்போது தேசியப் பட்டியல் நியமனத்தை துறைசார் நிபுணருக்கு வழங்குவது, அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத பகுதிக்கு அதனை வழங்குவது எனத் தெரிவித்து, தற்போதைய நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கு எமது பிரதிநிதித்துவம் இல்லை எனவே அம்பாறை மாவட்டத்திற்கு இந்த தேசியப் பட்டியில் நியமனத்தை வழங்குவது தொடர்பான கருத்தை நான் முன்வைத்தேன்.

அப்போது ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக குகதாசன் என்பவருக்கு வழங்க வேண்டும் என்ற கருத்தும் வந்தது. அம்பாறைக்குப் இந்த தேசியப் பட்டியல் நியமனத்தை வழங்கினால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பாராத நிலமை ஏற்பட்டுள்ளதாலும், மக்களுடைய அபிப்பிராயங்களை பெறுவதற்காகவும், கட்சியினுடைய நிலமையை மேலோங்கச் செய்வதாகவும் அமையும் என நான் எடுத்துக் கூறினேன்.

இந்த விடையத்தை எமது கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் சம்மந்தன் ஐயா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டு, அதே தொலைபேசியை என்னிடம் தந்தார். அப்போது என்னிடம் தலைவர் சேனாதிராஜா அவர்கள் இந்த தேசிய பட்டியலை தான் விரும்பவில்லை எனவும், ஆனாலும், இதனை பெற்றுக் கொள்ளுமாறு பலர் நிற்பந்திப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் சம்மந்தன் ஐயா தொலைபேசியை வாங்கி அம்பாறைக்கு இந்த நியமனத்தை வழங்குவது பொருத்தமாக இருக்கும் என தலைவர் சேனாதிராஜாவிடம் தெரிவித்து விட்டு தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்.</p>
<p>அப்போதிருந்த நிலமையில் கடந்த 09 ஆம் திகதிக்கு முன்னர் தேசியப் பட்டியல் விபரத்தை அனுப்பி வைக்கவேண்டும் என்பதை நான் தெரிந்திருந்தேன்.

பின்னர் இதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டன. நான் த.கலையரசனின் பெரை முன்மொழிந்தேன் பின்னர் அவருடைய தகமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம். பின்னர்தான் நான் தவராசா கலையரசனின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவிட்டு 9 ஆம் திகதி ஊடகங்கள் வாயிலான இந்த தீர்மானத்தை வெளிப்படுத்தினேன். தற்போது இது தொடர்பில் சில சர்ச்சைகள் வந்துள்ளன. இதுதொடர்பில் நாளை இடம்பெறவுள்ள எமது அரசியற் குழு கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளோம்.

என்னுடைய நிலைப்பாடு என்னவெனில் இந்த நியமனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டதன் பின்னர்தான் இது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது. ஏற்கனவே குகசதாசனுக்கு வழங்கப்பட்டிருந்தால் இந்த சர்சை எழுந்திருக்காதா? என்ற கேள்வியும் வருகின்றது. எவ்வாறாயினும் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தைவிட தற்போதைய நிலையில் அம்பாறைக்கு வழங்கியது அனைவராலும் எற்றுக் கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் என்னுடைய ஆதரவாளர்களும், என்னை இந்த தேசியப் பட்டியல் நியமனத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் நிர்ப்பந்தித்திருந்தார்கள். அது பொருத்தமானதாக அமையாது என நான் என்னுடைய ஆதரவாளர்களுக்குத் தெரிவித்திருந்தேன்.

மாறாக நான் பொதுச் செயலாளராகிய நான் தன்னிச்சையாக நடந்து கொண்டுள்ளேன் என எமது தலைவர் தெரிவித்திருக்கின்றார். உண்மையாக நான் தன்னிச்சையாக நடந்திருந்தால். இந்த தேசியப் பட்டியலுக்கு நான் என்னையே நியமித்திருக்க முடியும்.

எனவே இது எந்த விதத்திலும் எனது தன்னிச்சையான முடிவு அல்ல. இந்த நியமனம் தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றார்கள். நான் எக்காலத்திலும், வடக்கு கிழக்கு என்ற பேதமில்லாமல் செயற்படுபவன். தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டவன்.

தேர்தலுக்காக இந்தக் கட்சியில் சேர்ந்த கொண்டவன் அல்ல. நான் 16 வயதிலே மாணவர் பேரவையிலே சேர்ந்து, இளைஞர் பேரவையிலே இருந்து, பின்னர் தமிழரசு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வரலாற்றினூடாகப் பயணம் செய்தவன் என்ற அடிப்படையில், கட்சியினுடைய நன்மைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே அனைத்து தலைவர்களும், இது கட்சியினுடைய தீர்மான என்பதை பின்னுறுதிப்படுத்தி வெளிப்படுத்துமாறு அன்பாக வேண்டுகின்றேன் என அவர் தெரிவித்தார்.