70 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்

301 0

இம்முறை நடைபெற்ற 9 ஆவது பாராளுமன்றத் தேர் தலில் 70 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் 23 க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களே இவ்வாறு தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் ரணி ல் விக் கிர மசிங்க, ரவி கருணநாயக்க, அகில விராஜ் கரிய வசம், நவீன் திசான நாயக்க, வஜிரா அபேவர் தன, தயா கம கே, ருவான் விஜவர் தன, அர்ஜுன ரண துங்க, அஜித் மன்ன பெரும, ஹிருணி கா பிரேமச் சந்திர , சுஜீவ செனசிங்க, அஜித் பி.பெரே ரா, பாலித தே வர பெ ரும, ஏ.எச். எம் பௌசி, சதுர சேனார த்ன, விஜி த் விஜய முனி , எட்வர்ட் குண சேகர , விஜெ பால ஹெட்டிய ராச்சி, பிய சேனா கமக, பண் துலால் பண் டாரி கோட,

பாலித ரங்கே பண்டார , லக்ஷ்மன் விஜயமான மற்றும் ஐக் கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளு மன்ற உறுப் பினர் விஜய கலா மகேஷ் வரன் ஆகியோர் இம்முறை தேர்த லில் தோல்வியை சந்தி த்துள்ளனர்.

இலங்கை தமிழசுக் கட்சி சார்பில் வன்னியில் போட்டி யிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீங்கநதராசா மற்றும் எஸ். சிவமோகன்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பி லிருந்து வெளியேறி இம் முறை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந் தனும் பாராளுமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் கவிந் தன் கோடீஸ் வரன், திகாமடுல்ல மாவட்டத் தில் மக்கள் ஆணையைப் பெறத் தவறியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் களான மொஹ மட் நசீர், எம்.ஐ.எம்.மன்சூர் , தேசிய காங்கிரஸில் போட்டி யிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.மொஹ மட் இஸ்மாயிலும் ,

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் களான ஞானமுத்து ஸ்ரீநேசனும் சீனித் தம்பி யோகோஸ்வரன்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பும் ஆகியோர் கள் ஆசனத்தை இழந்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்து வப்படுத்திய 10 க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இம் முறை தங்கள் இடங்களை இழந் தனர்.

திலங்க சுமதிபால, லக்ஷ்மன் யாபா அபேவர்தன, டி.பி. ஏகநாயக்க, எஸ்.பி. நவின்ன, தாராநாத் பஸ்நாயக்க, லக்ஷ்மன் வசந்த பெரேரா, இந்திக பண்டாரநாயக்க,

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத் திய நிரோஷன் போயரமரத்ன மற்றும் துலிப் விஜசேகர ஆகியோரும் இந்த முறை இடங்களை வெல்ல முடிய வில்லை.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப் பினர் சுனில் ஹந்துன் நெத்தி, வைத்தியர் நலிந்த ஜெய திச, நிஹால் கலப் பத்தி ஆகியோரை பிரதிநிதி த் துவப் படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த முறை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கை தமி ழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி ராசா, மற் றும் முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் ஈஸ்வர பாதம் சரவ பவனும் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளனர்.</p>
<p>இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை வென்று மகத்தான வெற்றியைப் பெற்றது. தேசிய பட்டியலில் 17 ஆசனங்களையும் கைப்பற்றி யுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ளத்தில் 54 ஆசனங் களையும், தேசிய பட்டியலில் 07 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தையும் பாராளுமன்றத் தில் 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது இலங் கை தமிழசுக் கட்சி தேசிய பட்டியலில் ஒரு ஆசனத் தையும், பாராளுமன்த்தில் 9 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

எனினும் இலங்கையில் பழமைவாய்ந்த பெரும் கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் ஒரு ஆசனத் தைக் கூட பெறா மல் பாரிய தோல்வியை சந்தித் துள்ளது. இருப்பினும் தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய பட்டி யலில் ஒரு ஆசனத்தையும், பாராளுமன்றத் தில் 2 ஆசனங் களையும் கைப்பற்றியுள்ளது.

கொடி அடையாளத்தின் கீழ் முதன்முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் அதுரலியே ரத்தன தேரர் தேசிய பட்டியலில் உறுப் பினர் பதவி கிடைத்துள்ளது.

இதனைவிட புத்தளத்தில் முஸ்லிம் தேசிய கூட்டணி ஒரு ஆசனத்தினை பெற்றுள்ளது. அத்துடன் தேசிய காங்கிரஸ் ஒரு ஆசனத்தினையும், யாழில் தனித்து போட்டியிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றி யுள்ளது. இதனைவிட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அனை த்து இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் தலா ஒவ்வொரு ஆசனங்கள் வீதம் கைப்பற்றினர்.

இம் முறை பொதுத் தேர்தலில் 20 அரசியல் கட்சிகளும் 34 சுயாதீன குழுக்களும் போட்டியிட்டன, அவற்றில் 15 அரசியல் கட்சிகள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு தேசிய பட்டியில் இடத்தையாவது வெல்ல முடிந்தது.