மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் – நளின் பண்டார

219 0

மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வஜிர அபேவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

அதாவது, அவர்கள் இன்னமும் தங்களில் பிழைகளைத் திருத்திக் கொள்ள முற்படுகிறார்கள் இல்லை என்றே தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழிவடைந்துள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இந்த தரப்பிடம் நாம் மீண்டும் ஒன்றை வலியுறுத்துகிறோம்.

அதாவது, இனியேனும் மக்களின் ஆணைக்கு செவிசாய்த்து அவர்கள் வழங்கிய ஆணைக்கு இணங்க, புதிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.

மக்கள் எதிர்ப்பார்க்கும் தரப்புக்கு கட்சியை ஒப்படையுங்கள். இப்போதைய நிலைமையில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக சஜித் பிரேமதாஸ காணப்படுகிறார்.

இதனை புரிந்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இவரிடம் ஒப்படையுங்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாதுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.