தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு

190 0

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞரின் சடலம் நேற்றிரவு (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக குறித்த இளஞர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டிலக்சன் (21 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்