ஹெரோயினுடன் பிரதான வியாபாரி ஒருவர் கைது

186 0

பேலியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாரிய அளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் 1 கிராம் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) பிற்பகல் மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எரவ்வல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

34 வயதுடைய எரவ்வல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாதாள உலக குழு உறுப்பினர்களான கொஸ்கொட தாரக மற்றும் ககன என்பவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது