கரும்புலிகள் வாழ்ந்த மண்ணில் காக்கா அண்ணை என்ன சொன்னார்?

361 0

கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக்கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்!” என தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் கருமு்புலிகள் யார் என்பதை கூறியள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது.

தரைக் கரும்புலிகள் ,கடற்கரும்புலிகள்,வான் கரும்புலிகள் கரும்புலிகளின் தாக்குதுல் களங்கள் விரிவடைந்தன. ஆயிரம் ஆயிரம் போராளிகள் தம்மை கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொண்டார்கள்.

இதே வேளை மறைமுக கரும்புலிகளின் தியாகம் உச்சத்தை தொட்டு நிற்கின்றது,

இந்த மகத்தான வீரர்களின் தியாகத்திற்கு நாம் என்ன பதில் சொல்லப் போகின்றோம் ?

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.

தமிழ்த் தேசியத்தைத் தூக்கிலிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வரும் இன்றைய சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியும் – மாவீரர் அறிவிழியின் தந்தையுமான பசீர் காக்கா காலப்பொருத்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய முக்கிய கட்சிகளுடன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் தேசியத்தை நேசிப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவற்றில் எந்த அணிக்கு வாக்களிப்பது என்பது அவரவர் சொந்த முடிவு.

ஆனால், மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழி நடத்திய தலைவர் பிரபாகரனை என்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரஹாம் மதியாபரணம் சுமந்திரனுக்கு வாக்களிப்பது, எமது மாவீரர்களின் தியாகத்தைக் கணக்கிலெடுக்காத தோற்றத்தைக் கொடுத்து விடும் என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கத் தீர்மானிப்போர் சுமந்திரனைத் தவிர வேறு மூன்று வேட்பாளர்கள் எவருக்காவது அளிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டுகிறேன். என குறிப்பிட்டள்ளார். எனவே, தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத யூலை மாதத்தில் கரும் புலிகளை வணங்கி வாக்குக்களை சரியானவர்களுக்கு அளிப்போம்.