ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிப்பு

345 0

ராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

ஈராக் நாட்டின் புரட்சிப்படை தலைவரான சுலைமானி கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே பல மாதங்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது.
சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமானப்படை தளங்கள் மீது
அவ்வப்போது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ள ’கிரீன் சோன்’ பகுதியை நோக்கி இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட அந்த ராக்கெட்கள் பாக்தாத் பகுதிக்குள் நுழைந்த உடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உடனடியாக செயல்பாட்டிற்கு வந்தது. அதில் இருந்து ஏவுகணை பாய்ந்து சென்று தூதரகம் நோக்கி வந்து கொண்டிருந்த ராக்கெட்டை நடு வானில் தாக்கி அழித்தது.
ஈராக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ராக்கெட்டை தாக்கி அழித்ததால் அமெரிக்க தூதரம் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.