மக்களே இது உங்களுக்கானது ! ஊரடங்கு தளர்த்தப்படும் போது அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது

303 0

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படும் நோய்த் தொற்றுப் பரவலில் இலங்கை 3A என்ற கட்டத்திலுள்ளது.

இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அதாவது இம் மாத நடுப்பகுதிக்குள் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என்று இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு அபாய கட்டத்திற்கு செல்லாமலிப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 – 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும்.

எனினும் மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதால் திறனான கட்டுப்பாட்டை பேணுதல் பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்படும் போது

நீங்கள் சமூக இடைவெளியை பேணும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள்,

பொது இடங்களில் கூட வேண்டாம்

 

கீழ்வரும் நிலையிலுள்ளவர்கள் வெளியே செல்ல வேண்டாம்

 

நோய் அறிகுறிகள் காணப்படுகின்றவர்கள்

 

60 வயதிற்கும் மேற்பட்டவர்கள்

 

ஏற்கனவே வேறு நோய் நிலைமைகள் உள்ளவர்கள்

 

உணவு மற்றும் ஏனைய பொருட்களை தேவைக்கதிகமாக சேர்த்து வைக்காதீர்கள்

 

நாடளாவிய ரீதியில் போதியளவு விநியோகம் இருக்கின்றது

 

அளவுக்கு அதிகமாக கொள்வனவு பாதிப்படையக்கூடிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும்.

 

ஏனையோரில் இருந்து ஒரு மீற்றர் எனும் பாதுகாப்பு இடைவெளியை பேணிக்கொள்ளுங்கள்
நீங்கள் கைகளை நீட்டும் போது ஒருவரைத் தொடக்கூடியவாறு இருக்கின்றதாயின் அவர்கள் உங்களுக்கு மிகவும் ; நெருகு்கமாக காணப்படுகின்றார் என அர்த்தம்.

 

சிறந்த அயலவராக இருங்கள்.

 

இலகுவில் பாதிக்கப்படக்கூடிய உறினர்களுக்கும் நண்பர்களுக்கும் பொருட்களை பொள்வனவு செய்யுங்கள்.

 

அவர்களின் வீட்டு வாசல் வரை கொண்டு சேருங்கள் ஆனால் நேரடி தொடுகையை தவிர்த்திடுங்கள்

 

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒருவர் மட்டும் வெளியே செல்லுங்கள்.

 

நீங்கள் வீடுகளுக்குள் வரும் போது உங்கள் கைகளை முதலில் சவர்க்காரமிட்டு கழுவியவுடன் உங்கள் ஆடைகளையும் கழுவுங்கள். வெயிலில் நன்றாக உலர விடுங்கள்

வீடுகளில் இருந்து கொவிட் 19 என்ற ஆட்கொல்லி நோயை நாட்டிலிருந்து விரட்ட ஒத்துழையுங்கள்