ஜனாதிபதி, பிரதமரின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்த குழு -கொக்குவில் தலையாழியில் சம்பவம்- (படங்கள் இணைப்பு)

802 0

img_0848யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மறுபுறத்தில் இச் சமூக விரோத குழுக்களுடைய அட்டகாசங்கள் மற்றும் நாசகர வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்லுகின்றது.
குறிப்பாக நேற்று இரவு கொக்குவில் – தலையாழிப் பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தினை உடைத்த இச் சமூகவிரோத குழு அங்குள்ள தலையாழி வைரவர் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலையின் பெயர்பலகையினையும் உடைத்து நாசம் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் குறித்த சனசமூக நிலையத்திற்குள் இருந்து ஜேஃ123 கிராம சேவகர் அலுவலகத்தினையும் நாசம் செய்த அவர்கள், சனசமூக நிலையத்தினை நிர்மானிப்பதற்காக அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட்டமைக்காக அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட் அறிவித்தல் பதாகையினையும் கிழித்து நாசம் செய்துள்ளன்.
இச் சமூக விரோத குழு அங்கு நின்று செய்த அட்டகாசத்தினை தாங்கிக் கொள்ளாத அப்பகுதி பொது மக்கள் இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
வழமைக்கு மாறாக சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.பொலிஸார் அங்கு வந்து இறங்கி அட்டகாசம் புரிந்தவர்களை மடக்கிப் பிடிப்பது போல் பிடித்தனர்.
இவ்வாறு பிடித்த அவர்களை ஆலயத்திற்கு பின்புறமாக கொண்டு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொலிஸார் அட்டகாசம் புரிந்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் பொது மக்கள் மத்தியில் வந்த பொலிஸார் இனி அந்த நபர்கள் இங்க வரமாட்டார்கள் என்றும், எந்த பிரச்சினையும் இங்கு நடக்காது என்றும் தெரிவித்தவுடன், இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு உடன் அழைக்குமாறு அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

img_0847