வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும்!

634 0

mahinda-rajapaksa-reuters_650x400_81439909591வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அளுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், அனேகமான இடங்களில் விகாரைகள் மூடப்பட்டு வருகின்றன. வடக்கில் அது வேகமாக இடம்பெற்று வருகின்றது.

வடக்குக் கிழக்கை மீளிணைத்து தானே ஐக்கியப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட அவர், அங்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைச் சாதாரணமாக கருதிவிடமுடியாது எனவும் தெரிவித்த அவர், நல்லிணக்கம் அவசியமானதுதான் எனவும் அதனை குறித்த ஓர் எல்லைக்கோ அல்லது பிரதேசத்திற்கோ மட்டுப்படுத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வடக்குக் கிழக்கில் சிங்களவர்கள் மிகவும் குறைந்த தொகையிலேயே வசிக்கின்றனர். இவர்களைப் பாதுகாக்க வேண்டியதும், அவர்களுக்காக குரல்கொடுக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதாகவும், அவர்களது அடையாளங்களும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.