இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

202 0

இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

இந்நிலையிலேயே தற்போது, கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை65 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.