ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பாக இறுதி தீர்மானம் எட்டப்பட்டது – அகிலவிராஜ்

288 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட இறுதி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தல் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் கைச்சாத்திடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வேட்பு மனு கையளிப்பிற்கு முன்னரேனும் ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பினர் பொது இணக்கப்பாட்டுக்கு வருவார்களாயின் அது தொடர்பில் ஆராய தயாராகவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.