ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை முன்வைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்!

411 0

mahinda-and-chandrika1-615x461முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஸ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பாதீட்டுக்கு ஒன்றுக்கொன்று வேறுபட்டக் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்கட்சி 2017 ஆம் ஆண்டு பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அண்மையில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு பாதீட்டில் எந்த மக்கள் நல திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த கூறியுள்ளார்.இதேவேளை, பாதீடானது நாட்டுக்கு வெற்றிகரமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வேயன்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அரசாங்கத்தில் பங்குதாரர்களாக இல்லாதவர்கள் பாதீட்டை தவறான முறையில் விமர்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஆட்சிகாலத்தில் ஊழலில் ஈடுப்பட்டவர்கள், தம்மை பாதுகாத்து கொள்வதற்கே மலர் மொட்டு சின்னத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.